ஜோகூர் பாரு, பிப்ரவரி 18 (பெர்னாமா) -- ஜோகூர் மாநில அரசாங்கத்தின் அனைத்து துறைகள் மற்றும் நிறுவனங்களில் ஊழலை எதிர்ப்பதற்கான முயற்சிகள் சமரசம் இல்லாமல் செயல்படுத்தப்பட வேண்டும் என்று மாட்சியமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் உத்தரவிட்டுள்ளார்.
மாநிலத்தின் நல்வாழ்வும் செழிப்பும் பராமரிக்கப்படுவதை உறுதி செய்வதில் நிர்வாகத்தின் நேர்மையும் வெளிப்படைத்தன்மையும் முக்கிய அம்சங்களாகும் என்று அவர் தெரிவித்தார்.
இஸ்தான் பாசிர் பெலாங்கியில் ஜோகூர் மந்திரி புசார் டத்தோ ஓன் ஹக்பிஸ் காசி மற்றும் மாநில அரசாங்க தலைமைச் செயலாளர் டத்தோ முஹமட் ரிடா அப்துல் காடிர் ஆகியோர் மாமன்னரை சந்தித்தபோது இச்செய்தி வழங்கப்பட்டதாக மாமன்னரின் முகநூல் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், பாசிர் கூடாங் மாநகராண்மைக் கழக, டத்தோ பண்டார் டத்தின் படுக்கா ஹசாலிசா ஜாலில் மற்றும் மாநில நில மற்றும் சுரங்க இயக்குநர் முஹ்மட் சாகிப் அலி ஆகியோரும் இச்சந்திப்பில் கலந்து கொண்டனர்.
சுமார் இரண்டு மணி நேரம் நீடித்த இச்சந்திப்பில் ஓன் ஹபிஸ் தலைமைத்துவத்தில் அடைந்த தற்போதைய முன்னேற்றங்கள் குறித்து, மாமன்னருக்கு விளக்கமளிக்கப்பட்டது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)