பொது

மின்கம்பிகளைத் திருடிய நால்வரை போலீஸ் தீவிரமாகத் தேடி வருகிறது

18/02/2026 05:24 PM

காஜாங், பிப்ரவரி 18 (பெர்னாமா) -- நேற்று சிலாங்கூர் செமிஞ்சே, D’KAYANGAN SETIA ECOHILL அடுக்குமாடி குடியிருப்பு பகுதி அருகே உள்ள தெனாகா நேஷ்னல் நிறுவனத்திற்கு சொந்தமான மின்கம்பிகளை திருடிய நால்வரை போலீஸ் தீவிரமாக தேடி வருகிறது.

இச்சம்பவம் குறித்து இன்று காலை மணி 6.54 அளவில், புகார் கிடைத்ததாக காஜாங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி நஸ்ரோன் அப்துல் யூசோப் தெரிவித்தார்.

அடையாளங்களை உறுதிப்படுத்த முடியாத நான்கு ஆடவர்கள் சாம்பல் நிற காரைப் பயன்படுத்தி இந்தச் செயலைப் புரிந்தது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்ததாக ஏசிபி நஸ்ரோன் இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

டி.என்.பி-க்கு சொந்தமானது என சந்தேகிக்கப்படும் மின்கம்பிகளை திருடிய அந்த ஆடவர்கள், அங்கே வசிக்கும் உள்ளூர்வாசிகளால் கண்டிக்கப்பட்ட பின்னர் தப்பி ஓடியதாக கூறப்படுகிறது.

இச்சம்பவம் குற்றவியல் சட்டம் செக்‌ஷன் 431A இன் கீழ் தற்போது விசாரிக்கப்பட்டு வருவதாக அவர் கூறினார்.

இது குறித்து தகவல் அறிந்தவர்கள் அருகில் இருக்கும் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கும் படி, அறிவுறுத்தப்படுகின்றனர்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)