பொது

கடலில் மூழ்கிய மியன்மார் மாணவரின் உடல் கண்டெடுக்கப்பட்டது

18/02/2026 05:56 PM

கோலா திரெங்கானு, பிப்ரவரி 18 (பெர்னாமா) -- கடந்த திங்கட்கிழமை கோலா திரெங்கானு, பத்து பூரோக் கடற்கரை அருகே குளித்துக் கொண்டிருந்தபோது நீரில் மூழ்கி இறந்ததாக நம்பப்படும் மியன்மார் நாட்டைச் சேர்ந்த மாணவரின் உடல் இன்று அதிகாலை கண்டெடுக்கப்பட்டது.

தனியார் உயர்கல்வி கழகத்தில் பயின்ற 18 வயதான சித்து மோ ல்வின் எனும் அந்த மாணவரின் சடலம், அதிகாலை மணி 2.30-க்கு கண்டெடுக்கப்பட்டதாக கோலா திரெங்கானு மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி அஸ்லி முஹமட் நோர் தெரிவித்தார்.

சம்பவம் நிகழ்ந்த இடத்திலிருந்து 350 மீட்டர் தொலைவில் கரை ஒதுங்கிய அம்மாணவரின் உடலை, கடற்கரையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த SAR பணியாளர்கள் கண்டுபிடித்ததாக இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் அஸ்லி முஹமட் நோர் தெரிவித்தார்.

அடையாளம் காணப்பட்ட பின்னர், அம்மாணவரின் உடல் சுல்தானா நோர் சாஹிரா மருத்துவமனையின் தடயவியல் பிரிவுக்கு கொண்டு செல்லப்பட்டதாக அவர் கூறினார்.

தமது மூன்று நண்பர்களுடன், விடுமுறையைக் கழிக்க திரெங்கானு வந்த அந்த மாணவர், பத்து பூரோக் கடற்கரையில் குளித்துக் கொண்டிருந்த போது, நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)