பொது

10 ஊடகவியலாளர்களுக்கு ஹவானா நிதியுதவி

28/02/2026 04:05 PM

புத்ராஜெயா, 28 பிப்ரவரி (பெர்னாமா) -- ஊடகவியலாளர்களை ஊக்கப்படுத்தும் வகையில் தாபுங் காசே ஹவானா நிதியுதவியை பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் வழங்கினார். 

நோன்புப் பெருநாளுக்கு முன்னதாக, அக்கறை மற்றும் நல்வாழ்வின் அடையாளமாக 10 ஊடகவியலாளர்களுக்கு இந்த நிதியுதவி  வழங்கப்பட்டது. 

நேற்று, புத்ராஜெயா, ஶ்ரீ பெர்டானா வளாகத்தில், ஊடகவியலாளர்களுடன் இணைந்து பிரதமர் நோன்பு திறந்த நிகழ்ச்சியில் இந்நிதி அளிக்கப்பட்டது.  

பெர்னாமா, சினார் ஹரியான், பெரித்தா ஹரியான், உத்துசான் மலேசியா, நியூ ஸ்ட்ரேய்ட்ஸ் டைம்ஸ், ஆர்.டி.எம் மற்றும் மிடியா பிரிமா உள்ளிட்ட பல்வேறு ஊடகங்களின் பிரதிநிதிகள் நிதியுதவியை பெற்றுக் கொண்டனர். 

2023-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து, தாபுங் காசே ஹவானா நிதியுதவி மூலம் நாடு முழுவதும் உள்ள 658 ஊடகவியலாளர்கள் பயன் பெற்றுள்ளனர்.

--பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: மாலை 6 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]