துபாய், பிப்ரவரி 28 (பெர்னாமா) -- துபாய் டென்னிஸ் போட்டியில் இறுதி ஆட்டத்திற்கு டேனில் மெட்வெடேவ் முன்னேறினார்.
நேற்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில், அவர் ஃபெலிக்ஸ் ஆகர் அலியாசிம் உடன் விளையாடினார்.
கணித்ததை போலவே, 6-4, 6-2 என்ற நேரடி செட்களில் மெட்வெடேவ் வெற்றி பெற்றார்.
2023-ஆம் ஆண்டு துபாய் டென்னிஸ் போட்டியின் வெற்றியாளரான மெட்வெடேவ், மீண்டும் இம்முறை கிண்ணத்தை வெல்ல இலக்கு கொண்டுள்ளார்.
இறுதி ஆட்டத்தில், அவர் நெதர்லாந்தின் டாலன் கிரீஸ்பூருடன் களம் காணவுள்ளார்.
மற்றோர் அரையிறுதி ஆட்டத்தில், டாலன் கிரீஸ்பூரும் ஆண்ட்ரி ரூப்லெபும் விளையாடினர்.
இந்த ஆட்டத்தில், 7-5, 7-6 என்ற புள்ளிகளில் கிரீஸ்பூர் வெற்றி பெற்றார்.
கிரீஸ்பூரும் மெட்வெடேவும் சந்திக்கும் இறுதி ஆட்டம், மலேசிய நேரப்படி இன்றிரவு மணி 11-க்கு நடைபெறவுள்ளது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)