பொது

அசாம் பாக்கி விவகாரத்தில் மடானி அரசாங்கம் ஒருபோதும் அவரை தற்காக்கவில்லை

03/03/2026 03:36 PM

கோலாலம்பூர், 03 மார்ச் (பெர்னாமா) -- மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம், SPRM தலைமை ஆணையர் டான் ஶ்ரீ அசாம் பாக்கி தொடர்பான பங்குரிமை மற்றும் எஸ்.பி.ஆர்.எம் விவகாரங்கள் குறித்து, எதிர்கட்சியினர் எழுப்பியது தொடர்பில் மடானி அரசாங்கம் ஒருபோதும் அவரை தற்காக்கவில்லை என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் உறுதியாக கூறினார்.

விசாரணைகளின் வெளிப்படைத்தன்மை குறித்த தமது நிலைப்பாடு ஒருபோதும் மாறியதில்லை.

மாறாக, ஒவ்வொரு நடவடிக்கையும் நிர்ணயிக்கப்பட்ட சட்ட வழிமுறைகள் மற்றும் நிர்வாக விதிமுறைகளின்படி எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

''பாரபட்சம் காட்ட வேண்டாம். அன்வார் எப்போதாவது அது குறித்து பேசினாரா என்பதை அறிய உண்மைகளை ஆராயட்டும். அது செயல்முறைக்கு உட்பட்டு,'' என்றார் அவர். 

எதிர்கட்சியில் இருந்தபோது தமது நிலைப்பாட்டில் இருந்த வேறுபாடு குறித்து Machang நாடாளுமன்ற உறுப்பினர் வான் அஹ்மாட் ஃபேசால் வான் அஹ்மாட் கமால் எழுப்பிய கேள்விக்கு டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் அவ்வாறு பதிலளித்தார்.

விசாரணை தற்போது விரிவுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் செயல்முறையின் நேர்மையை உறுதி செய்வதற்கு தேசிய சட்டத்துறைத் தலைவர், தலைமையேற்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

--பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: மாலை 6 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]