பொது

அரசாங்கத்தை கவிழ்க்க முயற்சி; திட்டமிடப்பட்ட இயக்கம் செயல்படுவது விசாரணையில் அம்பலம்

03/03/2026 03:57 PM

கோலாலம்பூர், 03 மார்ச் (பெர்னாமா) -- அந்நிய நாட்டினரின் தலையீட்டின் மூலம் அரசாங்கத்தை கவிழ்க்க திட்டமிட்ட முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பில், குற்றவியல் சட்டம், செக்‌ஷன் 124B-இன் கீழ், அரச மலேசிய போலீஸ் படை, பி.டி.ஆர்.எம் விசாரணை அறிக்கையைத் திறந்துள்ளது.

2024-ஆம் ஆண்டு ஆகஸ்ட் தொடங்கி, அடுத்த பொதுத் தேர்தல் தேதி வரை நிர்ணயிக்கப்பட்ட நடவடிக்கைகளுக்கான காலக்கெடுவுடன் கவனமாக திட்டமிடப்பட்ட ஒரு திட்டம் அல்லது இயக்கம் செயல்படுவது தொடக்க கட்ட விசாரணையில் கண்டறிப்பட்டதாக பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று அம்பலப்படுத்தினார்.

வெளிநாட்டை தளமாகக் கொண்ட இந்த இயக்கம் பெரிய அளவிலான நிதியை உள்ளடக்கியதோடு, நாட்டின் அமைப்பு மற்றும் தொடர்புடைய நிறுவனங்களின் நம்பகத்தன்மையை கேள்விக்கு உரியதாக்கும் நடவடிக்கைகளைத் திட்டமிட உள்ளூர் மக்களின் ஆதரவு பெற்றிருப்பதாக அன்வார் விவரித்தார்.

''மேலும், அவர்களின் உத்தி, ஓரளவுக்கு குறிப்பிட்டது போல, கேள்விக்குரிய அனைத்துலக நிறுவனத்தின் பதிவுகளிலிருந்து நான் முன்னர் மேற்கோள் காட்டினேன். எடுத்துக்காட்டாக, அரசாங்கத்தின் முயற்சிகளை, குறிப்பாக எஸ்.பி.ஆர்.எம்-ஐ மறுக்கும் ஒரு உத்தியுடன் அனைத்து வெளிநாட்டு ஊடகங்களையும் தொடர்பு கொள்வதாகும்,'' என்றார் அவர். 

அரசாங்கத்தை கவிழ்க்க முயற்சித்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டு மற்றும் நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கான அச்சுறுத்தல் குறித்த விசாரணையின் நிலை குறித்து அராவ் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஶ்ரீ டாக்டர் ஷாஹிடான் காசிமின் கேள்விக்கு அவர் அவ்வாறு பதிலளித்தார்.

மற்றோர் நிலவரத்தில், அரசாங்கத்தை கவிழ்க்கும் முயற்சியாக நாட்டிற்கு எதிராக அனைத்துலக அழுத்தத்தை ஏற்படுத்த முன்னணி யூத சித்தாந்த இயக்கத்தினரின் சேவையை பயன்படுத்தியது கண்டறியப்பட்டுள்ளதாக பிரதமர் அம்பலப்படுத்தினார்.

அந்த விசாரணை அறிக்கை, முன்னாள் நிதியமைச்சர் துன் டயிம் சைனுடினின் குடும்ப கௌரவத்தைப் பாதுகாப்பதற்கான ஒரு முயற்சியாக மட்டுமே இருக்கக்கூடும், நாட்டை கவிழ்ப்பதற்கு அல்ல என்று ஆராவ் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஶ்ரீ டாக்டர் ஷாஹிடான் காசிம் குற்றம் சாட்டியிருந்தார்.

அந்த இயக்கம், முன்னாள் தலைவரை தற்காப்பதற்கான ஒரு தனிப்பட்ட முயற்சி மட்டுமல்ல, முழு மலேசிய சட்ட அமைப்பு மற்றும் நிறுவனங்களையும் சவாலுக்குரியதாக்கும் ஒரு திட்டமிட்ட செயலாகும் என்று அன்வார் சுட்டிக்காட்டினார்.

--பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: மாலை 6 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]