கோலாலம்பூர், 03 மார்ச் (பெர்னாமா) -- அந்நிய சக்திகளின் செல்வாக்குகள் எதுவுமின்றி வரும் பொதுத் தேர்தல் சீராக நடைபெறும் என்று அரசாங்கம் உத்தரவாதம் அளித்துள்ளது.
தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் குறித்து, அரசாங்கம் மற்றும் எதிர்க்கட்சி பிரதிநிதிகளுக்கு விளக்கமளிக்க, தேசிய பாதுகாப்பு மன்றம், எம்.கே.என் வழியாக ஒரு சிறப்பு சந்திப்பை ஒருங்கிணைக்க தாம் தயாராக இருப்பதாக பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
''ஏனென்றால், என்னைப் பொருத்த வரையில், இது கட்சியுடன் பிணைக்கப்படவில்லை. மாறாக, இது பாதுகாப்பு அல்லது தேசிய பாதுகாப்பு தொடர்பான விஷயம் ஆகும்," என்றார் அவர்.
நாட்டின் நிலைத்தன்மையை சீர்குலைக்க முயற்சிக்கும் அந்நிய சக்திகளால் பொதுத் தேர்தல் பாதிக்கப்படாது என்பதற்கான அரசாங்க உத்தரவாதம் தொடர்பில், இன்று மக்களவையில், ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.எஸ்.என். ராயரின் கூடுதல் கேள்விக்கு பிரதமர் அவ்வாறு பதிலளித்தார்.
--பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: மாலை 6 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]