உலகம்

ஈரான் மீது தாக்குதல்; மருத்துவமனைகளில் கடுமையானச் சேதம்

03/03/2026 04:40 PM

தெஹ்ரான், 03 மார்ச் (பெர்னாமா) -- ஞாயிற்றுக்கிழமை இரவு அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதல்களால் தெஹ்ரானில் உள்ள காந்தி மருத்துவமனை உட்பட ஈரானில் குறைந்தது ஏழு மருத்துவமனைகள் மற்றும் அவசர சிகிச்சை நிலையங்கள் தாக்கப்பட்டன.

இதனால் கடுமையான சேதம் மற்றும் உயிரிழப்புகள் ஏற்பட்டிருப்பதாக ஈரான் தெரிவித்திருக்கிறது.

காந்தி மருத்துவமனையின் கட்டிடம் கடுமையாகச் சேதமடைந்ததைக் காட்டும் காணொளி வெளியிடப்பட்டுள்ளது.

கடுமையான தாக்குதலால், அம்மருத்துவமனையில் வெளிப்புறச் சுவர்களில் பெரும்பாலானவை இடிந்து விழுந்தன.

கட்டிடத்தின் இடிபாடுகள் சிதறிக்கிடக்கின்றன.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதல்களால் ஈரான் முழுவதும் குறைந்தது ஒன்பது மருத்துவமனைகள் கடுமையான சேதமுற்றிருப்பதாக அரசு ஊடகம் அறிவித்துள்ளது.

அவ்விரு நாடுகளின் தாக்குதல்களால் மினாப் எனும் பகுதியில் உள்ள 165 குழந்தைகள் உயிரிழந்ததாக ஈரான் வெளியுறவு பேச்சாளர் தெரிவித்திருக்கிறார்.

மேலும் நாடு முழுவதும் உள்ள 131 நகரங்களில் பரவலாக மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களில், 555 பேர் மாண்டனர்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)