பொது

15 லட்சம் ரிங்கிட் மோசடி; நடிகைக்கும் அவரது கணவருக்கும் தடுப்புக் காவல்

05/03/2026 05:26 PM

சிரம்பான், 05 மார்ச் (பெர்னாமா) --  இல்லாத அரசு வழங்கிய நிலத்தை விற்பனை செய்ததாகக் கூறப்படும் மோசடி வழக்கில், 15 லட்சம் ரிங்கிட் இழப்பை ஏற்படுத்திய சம்பவம் தொடர்பில் போலீஸ் விசாரணைக்கு உதவும் பொருட்டு பெண் நடிகையும் அவரது கணவரும் மூன்று நாள்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

35 வயதான அப்பெண் மற்றும் அவரது 41 வயதான கணவருக்கு எதிரான தடுப்பு காவல் உத்தரவை, இன்று, சிரம்பான் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் நூருல் அசுயின் முஹமட் தல்ஹா பிறப்பித்தார்.

கைது செய்யப்பட்ட அவ்விருவரும், காலை மணி 9.18-க்கு நீதிமன்ற வளாகத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.

நேற்று, சிலாங்கூர், ஹுலு லாங்காட்டில் உள்ள கம்போங் பத்து 11-இல் அச்சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக, சிரம்பான் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி அசஹார் அப்துல் ரஹிம் கூறினார்.

சிலாங்கூர் மாநில அரசாங்கம் நன்கொடையாக வழங்கிய நிலத்தைப் பெறுவதற்கான பரிவர்த்தனை செயல்முறையில் ஏமாற்றப்பட்டதாக சந்தேகிக்கப்படும் முன்னாள் தொழிலதிபர் ஒருவர் வழங்கிய புகாரைத் தொடர்ந்து அக்கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)