பக்தபூர், 05 மார்ச் (பெர்னாமா) -- நேபாளத் தலைநகருக்கு அருகிலுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க நகரமான பக்தபூரில், இன்று வாக்காளர்கள் தங்களின் ஜனநாயக கடமையை நிறைவேற்றினர்.
இமயமலை கொண்ட அந்நாட்டின் அடுத்த கட்ட அரசியல் நிலைத்தன்மைக்கு சவாலாகக் கருதப்படும் இப்பொதுத் தேர்தலில் பாதுகாப்பை பலப்படுத்த, ஆயுதமேந்திய போலீசார் கடமையில் ஈடுபட்டிருந்தனர்.
ஊழல் மற்றும் வரையறுக்கப்பட்ட சுதந்திரம் தொடர்பில் இளைஞர்கள் தலைமையிலான போராட்டங்கள் வன்முறையாக வெடித்தது.
அதனைத் தொடர்ந்து, அப்போதைய பிரதமர் K.P. ஷர்மா ஒலியின் பதவி விலகி ஏறக்குறைய ஆறு மாதங்களுக்குப் பின்னர் இத்தேர்தல் நடைபெறுகிறது.
45 வயதான நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவரான ஒலி, ககன் தாபா தலைமையிலான நேபாளி காங்கிரஸ் மற்றும் முன்னாள் மாவோயிஸ்ட் கிளர்ச்சியாளர்களை உட்படுத்திய நேபாளி கம்யூனிஸ்ட் கட்சி என்.சி.பி உள்ளிட்ட 65 கட்சிகளைச் சேர்ந்த 3,400-க்கும் மேற்பட்ட வேட்பாளர்களுடன் மீண்டும் தேர்தலில் போட்டியிடுகிறார்.
வியக்கத்தக்க வகையில், கடந்த மூன்று ஆண்டுகளாக முன்னணியில் இருந்து வரும் 35 வயதான பாடகரும் அரசியல்வாதியுமான பாலேந்திர ஷா தலைமையிலான ராஷ்ட்ரிய சுவாதந்ரா கட்சி, இந்திய எல்லைக்கு அருகில் உள்ள முக்கிய தொகுதிகள் உட்பட ஒலி போன்ற தலைவர்களுக்கும் சவாலாக இருக்கின்றார்.
நேபாளத்தின் அரசியல் நிலைத்தன்மையை தீர்மானிக்கும் வகையில் இத்தேர்தல் இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
ஆனால், சக்திவாய்ந்த புதிய ஆணைகள், நிர்வாகத்தில் நீண்டகால சீர்திருத்தங்களாக மொழிபெயர்க்கப்படுமா என்பது குறித்த கேள்விகளும் இன்னும் எழுந்து வருகின்றன.
இதனிடையே, பிரதமர் பதவிக்கான வேட்பாளராக கருதப்படும், பாடகரான கத்மாண்டுவின் முன்னாள் மேயர் பாலேந்திர ஷா, இன்று நடைபெற்ற பொதுத் தேர்தலில் வாக்களித்தார்.
கலப்பு தேர்தல் செயல்முறையில் இத்தேர்தல் நடைபெறுகிறது.
இதில் 275 நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க சுமார் ஒரு கோடியே 90 லட்சம் பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
உள்ளூர் நேரப்படி காலை மணி ஏழுக்கு வாக்களிப்பு தொடங்கிய நிலையில் மாலை மணி ஐந்துக்கு நிறைவடையும்.
அதன் பின்னர், வாக்குகளை எண்ணும் நடவடிக்கை தொடங்கும் என்று அந்நாட்டு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)