ஜாலான் பார்லிமன், 05 மார்ச் (பெர்னாமா) -- எரிபொருள் மற்றும் பொருள்களின் விலையில் அழுத்தத்தை ஏற்படுத்துவதோடு, நாட்டில் பணவிக்க தாக்கத்தைத் தூண்டும் மத்திய கிழக்கு மோதல்களின் நிலவரத்தை அரசாங்கம் அவ்வப்போது அணுக்கமாக கண்காணித்து வருகின்றது.
வட்டாரத்தில் உள்ள புவிசார் அரசியல் நிலைமை, போக்குவரத்து, விநியோகச் செலவுகள் மற்றும் உலகளாவிய வர்த்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தலாம்.
இருப்பினும், உள்நாடு பொருளாதாரம் பாதிக்கப்பட்டால், தகுந்த உதவிகளை வழங்க அரசாங்கம் தயாராக இருப்பதாக, பொருளாதார துணை அமைச்சர் டத்தோ முஹமட் ஷஹார் அப்துல்லா கூறினார்.
இதுவரை நாட்டின் பணவீக்க விகிதம் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், வருமான வளர்ச்சியுடன் ஒப்பிடும்போது ஓரளவு அதிகரிப்பைக் காட்டும் வீட்டு செலவுகளின் செயல்முறையை அரசாங்கம் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், டத்தோ முஹமட் ஷஹார் கூறினார்.
"இந்த வளர்ச்சியை அரசாங்கம் கண்காணித்து வருகிறது. கண்டிப்பாக, அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகளில் பாதிக்கப்பட்ட விவகாரங்கள் இருந்தால், அவை உதவுவதற்காகவே இருக்கும்'', என்றார் அவர்.
இன்று நாடாளுமன்றத்தில், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றமான சூழ்நிலையைத் தொடர்ந்து பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த, பொருட்களின் விலைகளின் போட்டித்தன்மையிலிருந்து பயனர்களைப் பாதுகாக்க, உள்நாட்டு மின்சாரக் கட்டணத்தை தாராளமயமாக்கல், குறைந்த தரவு மற்றும் இலக்கவியல் தொடர்பான மாத கட்டணங்கள் உட்பட நிலப் போக்குவரத்துக்கான ஊக்கத்தொகையை அரசாங்கம் எந்த அளவிற்கு நிர்ணயித்துள்ளது என்பது குறித்து செனட்டர் டத்தோ டாக்டர் முஸ்தாபா முசா எழுப்பிய கேள்விக்கு அவர் அவ்வாறு பதிலளித்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)