பொது

ஈ.பி.எஃப்: 2030-இல் 60 வயதை எட்டும் 60 விழுக்காட்டினர் அடிப்படை சேமிப்பை வைத்திருப்பர்

05/03/2026 04:37 PM

கோலாலம்பூர், மார்ச் 05 (பெர்னாமா) -- 2030-ஆம் ஆண்டிற்குள், 60 வயதை எட்டும் சுமார் 60 விழுக்காட்டு ஊழியர் சேமநிதி வாரிய உறுப்பினர்கள், அடிப்படை சேமிப்பாக மூன்று லட்சத்து 90-ஆயிரம் ரிங்கிட்டை அடையும் திறனைக் கொண்டுள்ளனர்.

2025-ஆம் ஆண்டின் இறுதிக்குள், 18-இல் இருந்து 55 வயதிற்குட்பட்ட மலேசியர்களில், 31 லட்சம் அல்லது 41.2 விழுக்காட்டு ஊழியர் சேமநிதி வாரிய உறுப்பினர்கள் இந்த அடிப்படை சேமிப்பு நிலையை அடைந்துவிட்டதாக, இரண்டாவது நிதி அமைச்சர் டத்தோ ஶ்ரீ அமிர் ஹம்சா அசிசான் தெரிவித்தார்.

''இது, ஓய்வு பெறும்போது போதுமான சேமிப்பை உறுதி செய்வதற்கான குறைந்தபட்ச சேமிப்பு அளவை எட்டாத, முறையான துறையில் உள்ள மலேசியர்களில் 44 லட்சத்து 20,000 அல்லது 58.8 விழுக்காட்டினர் இன்னும் இருப்பதைக் காட்டுகிறது.,'' என்றார் அவர்.

இன்று, மேலவை கேள்வி பதில் நேரத்தின்போது அமிர் ஹம்சா அதனைக் கூறினார்.

போதுமான ஓய்வூதிய வருமானம் என்ற அளவுகோலை அறிமுகப்படுத்துவதன் மூலம், முன்கூட்டியே பணம் எடுப்பதால் ஏற்படும் அடிப்படை சேமிப்பு குறைப்பைக் கட்டுப்படுத்த முடிவதை உறுதி செய்வதற்கு அரசாங்கம் உறுதிபூண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)