பொது

மேரு போலீஸ் நிலையத்தில் கைகலப்பு; மூவர் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டனர்

06/03/2026 12:55 PM

கிள்ளான், மார்ச் 06 - சிலாங்கூர், மேரு போலீஸ் நிலையத்தில் ஏற்பட்ட சண்டையைத் தொடர்ந்து இன்று காலை மூவர் கிள்ளான் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டனர்.

குற்றவியல் சட்டம் செக்‌ஷன் 324, செக்‌ஷன் 506, செக்‌ஷன் 427 மற்றும் 1967-ஆம் ஆண்டு போலீஸ் சட்டம் செக்‌ஷன் 90-இன் ஆகியவற்றின் கீழ் அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளன. 

இதே சம்பவத்தில் தொடர்புடையதாக நம்பப்படும் மேலும் ஐவர் அரசு தரப்பு சாட்சிகளாகப் பயன்படுத்தப்படுவதாக சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஷாசெலி கஹார் தெரிவித்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)