உலகம்

மதுராவில் ஹோலி பண்டிகை

06/03/2026 04:23 PM

மது​ரா, 06 மார்ச் (பெர்னாமா) --  இந்தியாவின் வட மாநிலமான உத்தரபிரதேசத்தில் உள்ள டௌஜி மஹாராஜ் எனும் கோவிலில் நடைபெற்ற ஹோலி பண்டிகையில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

ஆண்டுதோறும் கொண்டாடப்படும் ஹோலி பண்டிகை, இவ்வாண்டும் கோலாகலமாக அனுசரிக்கப்பட்டது.

ஒரு​வர் மீது ஒரு​வர் வண்​ணப் பொடிகளை பூசி​யும், வண்ண நீரை பீய்ச்சி அடித்​தும் ஹோலி பண்டிகை விமரிசையாக கொண்டாடப்பட்டது.

தில​கமிட்​டு மகிழ்ச்​சியை வெளிப்​படுத்திய மக்கள் இனிப்​பு​களையும் பரி​மாறிக் கொண்டனர்.

உத்தரபிரதேசதம் மது​ரா​வில் ஹோலி பண்​டிகை மிகவும் பிரசித்தி பெற்​றது.

அங்கு சுமார் 10 நாட்​கள் முன்​பாகவே ஹோலி தொடங்கி விடு​கிறது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)