உலகம்

திரவ பெட்ரோலிய எரிவாயு விலை உயர்வுக்கு எதிராக போராட்டம்

08/03/2026 01:25 PM

இந்தியா, 08 மார்ச் (பெர்னாமா) --  ஈரானுடனான அமெரிக்கா-இஸ்ரேலியப் போர் உலக எரிசக்தி சந்தையில் அழுத்தத்தை ஏற்படுத்தும் நிலையில், சனிக்கிழமை திரவ பெட்ரோலிய எரிவாயு, எல்.பி.ஜி விற்பனை செய்யும் நிறுவனங்கள் தங்கள் விலைகளை உயர்த்தியதற்கு எதிராக இந்தியாவில் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மத்திய கிழக்கில் இருந்து வரும் விநியோகங்கள், போரினால் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து உலகளாவிய அளவில் விலைகள் உயர்ந்து வருவதால் இந்தப் போராட்டம் நடத்தப்பட்டது.

மத்திய கிழக்கிலிருந்து வரும் விநியோகங்கள் பாதிக்கப்பட்டதால், பெரும்பாலும் சமையல் எரிபொருளாகப் பயன்படுத்தப்படும் எல்.பி.ஜி-யின் விலையை இந்தியாவில் உள்ள நிறுவனங்கள் சுமார் ஓராண்டில் முதல் முறையாக உயர்த்தி உள்ளன.

நாட்டின் முன்னணி சுத்திகரிப்பு நிறுவனம் மற்றும் எல்.பி.ஜி விற்பனையாளரான Indian Oil Corp, டெல்லியில் 14.2 கிலோகிலாம் எல்.பி.ஜி கலணின் விலையை 7 விழுக்காடு அதிகரித்து 913 ரூபாயாக உயர்த்தியுள்ளதாக அதன் அகப்பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதைத் தவிர்த்து, மாநில சுத்திகரிப்பு நிறுவனங்களான ஐ.ஓ.சி, Bharat Petroleum Corp மற்றும் Hindustan ​Petroleum Corp ஆகியவையும் விலையை உயர்த்தி உள்ளன.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)