பொது

தேசிய வளர்ச்சியின் முக்கிய தூண்களாக செயல்படும் மகளிர்

08/03/2026 03:23 PM

கோலாலம்பூர், 08 மார்ச் (பெர்னாமா) --  நாட்டின் மகளிருக்கான உதவி, பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பான இடங்களை வழங்குவதில் அரசாங்கம் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொள்ளும் என்று துணைப் பிரதமர் டத்தோ ஶ்ரீ ஃபடில்லா யூசோப் தெரிவித்தார்.

தேசிய வளர்ச்சியின் முக்கிய தூண்களாக பெண்கள் செயல்படும் வேளையில், சிலர் திரைக்குப் பின்னாலும் பெரும் பங்காற்றுவதை அவர் சுட்டிக்காட்டினார்.

மக்களிடையே, பெண்களின் நிலை குறித்த மாறநிலை சிந்தனையை மாற்றியமைத்து அவர்களின் பங்களிப்பு மற்றும் சாதனைகள் அங்கீகரிக்கப்பட்டு பாராட்டப்பட வேண்டும் என்று, இன்று கொண்டாடப்படும் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு தமது முகநூல் பதிவில் ஃபடில்லா கூறினார்.

தலைமுறை கல்வியாளர்களாகவும் சமூக மாற்றத்திற்கான சக்திகளாகவும் பெரும்பாலான பெண்கள் உருவாகி வந்தாலும், அவர்களின் நல்வாழ்வு, பாதுகாப்பு மற்றும் நியாயமான வாய்ப்புகளை வலுப்படுத்தும் முயற்சிகள் தொடர்ந்து தீவிரப்படுத்தப்பட வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

மலேசியாவில், குடும்பம், கல்வி, பொருளாதாரம் மற்றும் தலைமைத்துவம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பெண்கள் முக்கிய பங்கு வகிப்பதாக அவர் மேலும் புகழாரம் சூட்டினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)