உலகம்

போக்குவரத்து தடைக்குப் பின்னர் மீண்டும் சேவைகளைத் தொடங்கியது துபாய் எமிரேட்ஸ்

09/03/2026 04:03 PM

துபாய், மார்ச் 09 (பெர்னாமா) -- பதற்றத்திலிருந்து விமான நிலையங்களின் செயல்பாடுகள் ஓரளவு மீண்டும் தொடங்கிய பின்னர், நேற்று துபாய் அனைத்துலக விமான நிலையத்தில் இருந்து அதிகமான பயணிகள் தங்களின் பயணங்களை மேற்கொண்டனர்.

ஐக்கிய அரபு சிற்றசின் தேசிய விமான நிறுவனமான Emirates, முன்னதாக துபாய் மற்றும் அபு தாபி நகரங்களில் இருந்து பாதுகாப்பான வான்வழி வழித்தடங்கள் மூலம் குறைந்தளவு சேவைகளை இயக்கி வந்தது.

ஆனால்.சனிக்கிழமை காலை ஈரானில் இருந்து அடையாளம் தெரியாத பொருள் ஒன்று, அப்பகுதி அருகே வந்ததைத் தொடர்ந்து, துபாய்க்குச் செல்லும் மற்றும் புறப்படும் அனைத்து விமான சேவைகளும் நிறுத்தம் கண்டன.

இருப்பினும் அடுத்த ஒரு மணிநேரத்திற்குள் விமான சேவைகள் மீண்டும் தொடர்ந்தன.

உலகின் மிகவும் பரபரப்பான அனைத்துலக பயண மையமாக இருக்கும் துபாய் அனைத்துலக விமான நிலையத்தின் போக்குவரத்து, புதன்கிழமையுடன் ஒப்பிடுகையில், வியாழக்கிழமை ஏறக்குறைய இரு மடங்காக அதிகரித்துள்ளது.

துபாயை தளமாகக் கொண்ட எமிரேட்ஸ் நிறுவனம், லண்டன், சிட்னி, சிங்கப்பூர் மற்றும் நியூயார்க் உள்ளிட்ட 82 தளங்களுக்கு குறைந்த அளவிலான விமான சேவைக்கான அட்டவணையை நிர்ணயித்துள்ளதாக கூறப்படுகிறது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: மாலை 6 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)