பொது

அரசாங்கத்தை உட்படுத்திய நோன்புப் பெருநாள் திறந்த இல்ல உபசரிப்பை ஏற்பாடு செய்ய வேண்டாம்

11/03/2026 06:08 PM

புத்ராஜெயா , மார்ச் 11 - அனைத்து அரசாங்க நிறுவனங்கள், ஜி.எல்.சி எனப்படும் அரசு சார்ந்த நிறுவனங்கள் மற்றும் ஜி.எல்.சி.சி  எனப்படும் அரசு தொடர்புடைய முதலீட்டு நிறுவனங்கள் ஆகியவை இவ்வாண்டு நோன்புப் பெருநாள் திறந்த இல்ல உபசரிப்புக்கு ஏற்பாடு செய்யக்கூடாது என்று பிரதமர் அறிவித்தார்.

இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அம்முடிவு எடுக்கப்பட்டதாக அன்வார் இப்ராஹிம் கூறினார்.

"செலவு செய்வதில் மிகவும் கவனமாகவும் மிதமாகவும் இருக்க வேண்டும் என்பதை இது நினைவூட்டுகிறது. சிலர் நிலைமைக் கட்டுப்பாட்டில் உள்ளதா, எண்ணெய் மற்றும் எரிவாயு போன்ற அத்தியாவசியப் பொருட்கள் இன்னும் வழங்கப்பட முடியுமா, போதுமானதாக இருக்கிறதா என்று கேட்கிறார்கள். நாம் ஏன் எச்சரிக்கையாக இருந்து சேமிக்க வேண்டும்,'' என்றார் அவர்.

மேலும், மேற்கு ஆசியாவில் நிகழ்ந்து வரும் போர் பதற்றத்திற்கு எதிரான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும் இந்த அறிவிப்பு அமைந்துள்ளதாக அன்வார் சுட்டிக்காட்டினார்.

மேலும், இந்நடவடிக்கைக்கு இணக்கும் தெரிவிக்கும் வகையில், அமைச்சர்கள், நிர்வாகம் மற்றும் அரசாங்கத் துறைகளைச் சேர்ந்த உறுப்பினர்களை உட்படுத்திய வெளிநாட்டுப் பயணங்கள், குறைவான அளவிலேயே இருக்கும் என்றும் அமைச்சரவைக் கூட்டம் முடிவு செய்துள்ளதாக பிரதமர் தெரிவித்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)