குவந்தான், 14 மார்ச் (பெர்னாமா) - பகாங், குவந்தான், ஜாலான் கம்பாங்கில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில், பல்வேறு வகையான 12 கார்கள் தீக்கிரையாகின,
இச்சம்பவம் குறித்து, காலை மணி 6.15-க்கு அழைப்புக் கிடைத்ததும், Indera Mahkota மற்றும் குவந்தான் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையங்களைச் சேர்ந்த 15 உறுப்பினர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
தொழிற்சாலைக்கு வெளியில் இருந்த ஒரு கார் தீப்பிடித்ததால் இவ்விபத்து ஏற்பட்டதாக Pahang மாநில மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் பேச்சாளர் தெரிவித்தார்.
மொத்தம் ஏழு கார்கள் முற்றிலுமாக தீக்கிரையான வேளையில், மேலும் ஐந்து கார்கள் 20 விழுக்காடு எரிந்து சேதமாகி உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
இச்சம்பவத்தில், யாரும் பாதிக்கப்படவில்லை.
இதனிடையே, சிலாங்கூர், பெட்டாலிங் ஜெயாவில் உள்ள நான்கு மாடி கட்டிடத்தில் இன்று காலை மணி 10.37 அளவில் ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு சிறுவர்கள் மரணப் பிடியிலிருந்து மீட்கப்பட்டனர்.
தங்கள் தரப்பு காலை மணி 10.46க்கு சம்பவ இடத்தை வந்தடைந்ததோடு, மூன்றாவது மாடியில் உள்ள வீட்டின் ஓர் அறையில் அவ்விரு சிறுவர்களையும் கண்டதாக சிலாங்கூர் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் நடவடிக்கைப் பிரிவு உதவி இயக்குநர் அஹ்மாட் முக்லிஸ் முக்தார் கூறினார்.
மீட்கப்பட்ட அவ்விரு சிறுவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)