பொது

நாட்டின் உணவு கையிருப்புகளை கே.பி.கே.எம் மறு ஆய்வு செய்யும்

14/03/2026 03:20 PM

ஷா ஆலம், 14 மார்ச் (பெர்னாமா) - மேற்கு ஆசியாவில் நிலவும் புவிசார் அரசியல் பதற்றங்களைத் தொடர்ந்து, வரும் மே மாதத்திற்குப் பிறகு, நாட்டின் உணவு கையிருப்புகளை விவசாய மற்றும் உணவுப் உத்தரவாத அமைச்சு, கே.பி.கே.எம் மறு ஆய்வு செய்யும்.

தற்போது அரிசி, கோழி மற்றும் காய்கறிகள் போன்ற அடிப்படை உணவுப் பொருள்கள் மே மாதம் வரை போதுமானதாக இருப்பதால், மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்று கே.பி.கே.எம் அமைச்சர் டத்தோ ஶ்ரீ முஹமட் சாபு தெர்வித்தார்.

''மே மாதம் வரை அவ்வப்போது கையிருப்பின் அண்மைய நிலவரங்களை நாங்கள் கண்காணிப்போம். முடிந்தால், போர் விரைவில் முடிவுக்கு வரும் என்று நம்புகிறோம்''
என்றார் அவர். 

இன்று, சிலாங்கூர் ஷா ஆலமில், கோத்தா ராஜா மண்டல பகுதியில் நடைபெற்ற மடானி விவசாய விற்பனைத் திட்டத்தை தொடக்கி வைத்த பின்னர் அவர் அவ்வாறு கூறினார்.

இதனிடையே, மேற்கு ஆசியாவில் ஏற்பட்டுள்ள மோதல்கள் காரணமாக உலகளாவிய நிச்சயமற்ற தன்மையினால் சந்தை விலைகளை பாதிக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளதால், நாட்டின் உணவு கையிருப்பில் கடத்தல் நடவடிக்கைகளைத் தடுக்க அரசாங்கம் தொடர்ந்து கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று சாபு கூறினார்


-- பெர்னாமா 

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)