கோலாலம்பூர், 14 மார்ச் (பெர்னாமா) -- பன்முகப்படுத்தப்பட்ட கச்சா எண்ணெய் மற்றும் தயாரிப்பு மூலங்கள் வழியும், பெஙெராங் ஒருங்கிணைந்த பெட்ரோலிய வளாகம், பி.ஐ.பி.சி-இல் ஆழ்கடல் சேமிப்பு மற்றும் முனைய உள்கட்டமைப்பு ஆகியவற்றாலும் மலேசியாவின் எண்ணெய் விநியோகம் நிலையாக உள்ளதாக மலேசிய பெட்ரோலிய வளக் கழகம், எம்.பி.ஆர்.சி தெரிவித்துள்ளது.
அவசியம் ஏற்பட்டால் கொள்கை அளவிலான வழிமுறைகளையும் செயல்படுத்த முடியும் என்று அதன் தலைவரும் தலைமை செயல்முறை அதிகாரியுமான முஹமட் யாசிட் ஜஃபார் கூறினார்.
இருப்பினும், மலேசியாவின் எண்ணெய் கையிருப்பு நிலையாக இருந்தாலும், பெரும்பாலான பொருளாதாரங்களைப் போலவே, மலேசியாவும் உலகளாவிய கச்சா எண்ணெய் விலை ஏற்ற இறக்கங்களிலிருந்து முழுமையாகப் பாதுகாக்கப்படவில்லை என்று அவர் குறிப்பிட்டார்.
ஏனெனில். மலேசியா இன்னும் கச்சா எண்ணெய் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலியப் பொருள்களை இறக்குமதி செய்வதை முஹமட் யாசிட் சுட்டிக்காட்டினார்.
அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிள் நீடித்து வரும் மோதல், மத்திய கிழக்கு கச்சா எண்ணெய் உற்பத்தியை 70 விழுக்காடு வரை குறைக்கக்கூடும் என்று எரிசக்தி ஆராய்ச்சி நிறுவனமான ரைஸ்டாட் எனர்ஜி தெரிவித்துள்ளது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)