கோத்தா கினபாலு, 14 மார்ச் (பெர்னாமா) -- நாடு முழுவதுமுள்ள எல்லைப் பகுதிகள் மற்றும் ஆபத்தான இடங்களில், குறிப்பாக சபா மற்றும் சரவாக்கில் அமலாக்கத்தை வலுப்படுத்துவதில், அமலாக்க நிறுவனங்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பு உயர்மட்ட செயற்குழு, ஜே.டி.பி.ஏ.பி முக்கிய கவனம் செலுத்துகிறது.
டீசலுக்கான உதவித் தொகை இன்னும் நடைமுறையில் இருப்பதைத் தொடர்ந்து கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக உள்நாட்டு வாணிப மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சர் டத்தோ அர்மிசான் முஹமட் அலி கூறினார்.
மேற்காசிய நெருக்கடி காரணமாக, உலக எண்ணெய் விலை உயர்ந்துள்ளதால், கட்டுப்படுத்தப்பட்ட பொருள்கள், குறிப்பாக டீசல் மற்றும் பெட்ரோல் ஆகியவற்றின் கசிவு மற்றும் கடத்தல் அதிகரித்ததைத் தொடர்ந்து இந்த ஜே.டி.பி.ஏ.பி செயல்படுத்தப்படுகிறது.
"உலகளாவிய எண்ணெய் விலை அதிகரிப்பு, மலேசியாவில் கடத்தல் மற்றும் கசிவு அபாயத்தை அதிகரிக்கச் செய்துள்ளது. ஏனெனில், மலேசியாவில் எண்ணெய் நிலையத்தில் உள்ள 'BUDI Madani' எண்ணெய் விலை சந்தை விலையை விட மிகக் குறைவு. இந்த விலை இடைவெளி இருக்கும்போது, கடத்தல் ஆபத்து ஏற்படுகிறது," என்றார் அவர்.
2026ஆம் ஆண்டு மார்ச் 12 முதல் 18ஆம் தேதி வரையிலான காலகட்டத்திற்கு விலை உயர்வு சீரமைக்கப்பட்ட போதிலும், டீசல் மற்றும் பெட்ரோலின் சில்லறை விலை சந்தை விலையை விட மிகக் குறைவாகவே உள்ளது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)