கோலாலம்பூர், 16 மார்ச் (பெர்னாமா) -- மேற்கு ஆசியாவில் நிகழ்ந்து வரும் மோதலைத் தொடர்ந்து, தற்போது எந்தவொரு பொருளாதார ஊக்குவிப்பு திட்டமும் அறிமுகப்படுத்தப்படாது.
பொருளாதார நிலைத்தன்மையை உறுதி செய்வதற்கான குறுகியகால நடவடிக்கைகளில் கவனம் செலுத்துவதும், நாட்டைப் பாதிக்கக்கூடிய எந்தவொரு விவகாரத்தைக் கண்காணிப்பதுமே, அரசாங்கத்தின் தற்போதைய அணுகுமுறை என்று இரண்டாவது நிதி அமைச்சர் டத்தோ ஶ்ரீ அமிர் ஹம்சா அசிசான் தெரிவித்தார்.
''மத்திய கிழக்கில் நெருக்கடி தொடருமா இல்லையா என்பது இன்னும் நமக்குத் தெரியவில்லை என்பதுதான் முக்கியம் என்று நான் நினைக்கிறேன். அது தொடரவில்லை என்றால், அதுபோன்ற ஒன்றை (பொருளாதார ஊக்குவிப்பு திட்டம்) செயல்படுத்த வேண்டிய அவசியமில்லை என்று நான் நினைக்கிறேன். தற்போது, எங்கள் அணுகுமுறை குறுகிய காலத்தைப் கண்காணித்து அங்குள்ள நிலைத்தன்மையை உறுதி செய்வதாகும்'', என்றார் அவர்.
மலேசியா பரஸ்பர முதலீட்டு நிதி ஈடுபாட்டு தினம், MyCIF-ஐ தொடக்கி வைத்தப் பின்னர் டத்தோ ஶ்ரீ அமிர் ஹம்சா செய்தியாளர்களிடம் அவ்வாறு கூறினார்.
மலேசியாவில் எண்ணெய் விநியோகம் இன்னும் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், பெட்ரோனாஸ் உடனான மதிப்பாய்வில், நாட்டின் பெட்ரோலியப் பொருள்களின் விநியோகம் குறைந்தபட்சம் மே மாதம் வரை போதுமானதாக இருப்பதாகவும், முன்னதாக பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறியிருந்ததை அவர் சுட்டிக்காட்டினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)