புத்ராஜெயா, 16 மார்ச் (பெர்னாமா) -- மேற்கு ஆசியாவில் அதிகரித்து வரும் இஸ்லாமிய நாடுகளுக்கு இடையிலான பதற்றத்தைத் தடுக்கவும், அதன் மூலம் ஏற்படும் பொருளாதாரத் தாக்கங்களைக் கருத்தில் கொண்டும் ஒற்றுமையின் அவசியத்தை மலேசியா வலியுறுத்தியது.
அண்மையில், ஈரான், ஓமன், சவுதி அரேபியா, கட்டார், குவைத், ஐக்கிய அரபு சிற்றரசு மற்றும் துருக்கி ஆகிய நாடுகளின் தலைவர்களுடன் நடத்தப்பட்ட இரண்டாவது சுற்று கலந்துரையாடலில் இவ்விவகாரம் குறித்து கலந்துரையாடப்பட்டதாக,
பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
"தலைவர்களுடனான இரண்டாவது சுற்று கலந்துரையாடல்களில் நாங்கள் கவலையையும் தெரிவித்தோம். ஏனென்றால், குற்றவாளிகள் இஸ்ரேல் மற்றும் சவுதி அரேபியா. அதன் தாக்கம் தற்போது இஸ்லாம் உலகம் முழுவதும் உள்ளது. குறிப்பாக, மத்திய கிழக்கு, துருக்கி மற்றும் அசர்பைஜான். எனவே, ஈரான் வெளியுறவு அமைச்சர் உடனான நான் மேற்கொண்ட இரண்டாவது சுற்று கலந்துரையாடலில் நான் வெளிப்படையாகக் கூறினேன். கண்டிப்பாக, அவர்கள் திட்டவட்டமான உத்தரவாதத்தை அளித்ததற்கு நான் நன்றி கூறுகின்றேன். இது சண்டைகள் மற்றும் இஸ்லாம் நாடுகளுக்கு இடையிலான போருக்கு வழிவகுக்கக்கூடாது'', என்றார் அவர்.
இன்று, மலேசிய முஸ்ஹவ் மடானி விழாவில் உரையாற்றிய பிரதமர், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா மேற்கொள்ளும் தாக்குதலினால் எழும் பதற்றங்கள் இஸ்லாமிய நாடுகளுக்கு இடையே மோதல்களைத் தூண்டும் அளவிற்கு அதிகரிக்காது என்று ஈரானின் வெளியுறவு அமைச்சர் தமக்கு உறுதியளித்ததாக கூறினார்.
மேலும், அமைதியையும் வளப்பத்தையும் பேணுவதற்கு ஒற்றுமையும் ஒத்துழைப்பும் அவசியம் என்று அன்வார் வலியுறுத்தினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)