அமெரிக்கா, 16 மார்ச் (பெர்னாமா) -- ஈரானுடன் வாஷிங்டன் தொடர்பில் இருந்தாலும், மோதலை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தைக்கு அந்நாடு தயாராக உள்ளதா என்பதில் சந்தேகம் எழுவதாக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
தமது நிர்வாகம் தெஹ்ரானுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், எனினும் அந்நாடு தயாராக இல்லை என்று தாம் கருதுவதாகவும் அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.
''அவர்கள் பேச்சுவார்த்தை மேற்கொள்ள விரும்புகிறார்கள். அவர்கள் பேச்சுவார்த்தை மேற்கொள்ள தீவிரம் காட்டுகிறார்கள். இந்நேரத்தில் அவர்கள் தயாராக இல்லை என்று நான் நினைக்கிறேன். அவர்கள் தயாராக இல்லை என்று நான் நினைக்கிறேன். அவர்கள் தீவிரம் காட்டுகிறார்கள். எனினும், அவர்கள் செய்ய வேண்டியதைச் செய்ய அவர்கள் தயாராக இல்லை என்று நான் நினைக்கிறேன். ஆனால் அவர்கள் ஒரு கட்டத்தில் தயாராக இருப்பார்கள் என்று நான் நினைக்கிறேன்,'' என்றார் அவர்.
ஈரானின் ஆளில்லா விமானங்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளை அமெரிக்கா தாக்கி வருவதாகவும், எனினும், இது குறித்து அதிகாரிகளிடமிருந்து எந்தவோர் உறுதிப்படுத்தலும் இல்லை என்றும் டிரம்ப் கூறினார்.
''ரானிடம் மிகக் குறைந்த அளவிலான துப்பாக்கிச் சூட்டு தாக்குதல் சக்தி மட்டுமே உள்ளது. அவர்களின் ஏவுகணைகள் மிகக் குறைந்த எண்ணிக்கையில் உள்ளன, நீங்கள் பார்க்க முடியும். அவை மிகக் குறைவு. ஏன் தெரியுமா? ஏனென்றால் அவர்களிடம் அவ்வளவு அதிகமாக இல்லை. மேலும் அவற்றின் உற்பத்தித் திறனை நாம் குறைத்துவிட்டதால், அதேபோல் ஆளில்லா விமானங்களும் மிகவும் குறைந்துவிட்டன. அவை சுமார் 20% ஆகக் குறைந்துவிட்டன. ஆனால், அவர்களிடம் இன்னும் சில உள்ளன. அவை மிகவும் கடினமானவை. ஆனால் ஆளில்லா விமானங்கள் செயலிழந்துவிட்டன. நாங்கள் தாக்குகிறோம், நேற்று முதல் நாங்கள் தாக்கத் தொடங்கிவிட்டோம். அவர்களின் ஆளில்லா விமானங்களை உற்பத்தி செய்யும் இடங்களைத் தாக்குகிறோம். அவற்றில் பெரும்பாலானவை அவை எங்கே என்று எங்களுக்குத் தெரியும் என்று நாங்கள் நினைக்கிறோம்,'' என்று டிரம்ப் மேலும் விவரித்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)