கோத்தா பாரு, 18 மார்ச் (பெர்னாமா) -- இன்று அதிகால, ஜாலான் மாச்சாங்-தானா மேரா-வில் உள்ள பண்டார் பாரு தானா மேராவில், இரு வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்தில் இருவர் உயிரிழந்தனர்.
64 வயதான மூதாட்டி ஒருவரும் 14 வயது இளம் பெண்ணும் அவ்விபத்தில் பலியானதாக PBK II செயல்பாட்டு கமாண்டர் ஹம்டான் அப்துல்லா தெரிவித்தார்.
அதிகாலை மணி 4.35-க்கு இரு வாகனங்கள் சம்பந்தப்பட்ட விபத்து குறித்து தமது தரப்புக்கு அவசர அழைப்பு கிடைத்ததாக, ஹம்டானை தொடர்பு கொண்ட போது, கூறினார்.
இச்சம்பவத்தில் பெரோடுவா மைவி காரில் அறுவரும், BMW 5 வகை வாகனத்தில் ஒருவரும் பயணித்தது, உறுதி செய்யப்பட்டதாவும் அவர் குறிப்பிட்டார்.
இவ்விபத்தில் மைவி காரில் இருந்த இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த வேளையில், மற்றவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.
பிரேதப் பரிசோதனைக்காக அவ்விருவரின் உடல்களும் தானா மேரா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, அடுத்தக்கட்ட விசாரணைக்காக போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)