பிரான்ஸ், 18 மார்ச் (பெர்னாமா) -- 2026 ஒர்லியன்ஸ் மாஸ்டர்ஸ் பொது பூப்பந்து போட்டி...
ஆடவருக்கான ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில், நாட்டின் தேசிய ஆட்டக்காரர் லீ சீ ஜியா தகுதிச் சுற்றிலேயே வெளியேறினார்.
சீனாவின் டோங் தியான் யாவ்விடம் தோல்வி அடைந்த காரணத்தால், அவர் பிரதான சுற்றுக்கு முன்னேறத் தவறினார்.
2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்றவரான சீ ஜியா இந்த ஆட்டத்தில் டோங் தியான் யாவ்விடம் நேரடி செட்களில் தோல்வி கண்டார்.
36 நிமிடங்கள் நீடித்த இந்த தகுதிச் சுற்றின் முதல் செட்டில் 18-21 என தோல்வி கண்ட சீ ஜியா அடுத்த செட்டில் வெல்வார் என்று கணிக்கப்பட்டது.
ஆனாலும், இரண்டாம் செட்டில் 14-21 எனும் நிலையில் அவர் மீண்டும் தோல்வி அடைந்து வெற்றி வாய்ப்பை நழுவவிட்டார்.
முன்னதாக, தகுதிச் சுற்றின் முதல் சுற்றில், இந்தியாவின் எஸ். சங்கர் முத்துசாமி சுப்ரமணியம் என்ற ஆட்டக்காரரை 21-12, 21-18 என்ற கணக்கில் தோற்கடித்து, சீ ஜியா தனது பயணத்தை நேர்மறையாகத் தொடங்கினார்.
இதனிடையே. நாட்டின் இளம் இரட்டையர் ஜோடியான , ஏரன் டாய்-கங் காய் ஜிங் முதல் சுற்றை வெற்றிகரமாகக் கடந்து முன்னேறி, தங்களது சிறப்பான ஆட்டத்தைத் தொடர்ந்தனர்.
மலேசிய இணை, ரஷ்யாவின் போட்டியாளார்களை 21-11, 21-17 என்ற நேரடி செட்களில் சிரமமின்றி வீழ்த்தியது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)