உலகம்

இராணுவத்தைப் பலப்படுத்தக் கூடுதல் நிதி தேவை - டிரம்ப்

20/03/2026 12:01 PM

வாஷிங்டன் டி.சி., 20 மார்ச் (பெர்னாமா) -- ஈரான் மீதான போருக்கு மத்தியில் பல முக்கிய காரணங்களுக்காக அமெரிக்காவிற்கு கூடுதல் நிதி தேவைப்படுவதாக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் தெரிவித்திருக்கிறார்.

ஈரான் மீது மேற்கொள்ளப்படும் தாக்குதல்களுக்காக பென்டகனுக்கு 20 கோடி அமெரிக்க டாலர் தேவைப்படுவதாக அண்மையில் வெளியிடப்பட்ட  ஊடக அறிக்கை குறித்து வினவப்பட்டபோது டிரம்ப் அவ்வாறு கூறினார்.

''ஆனால், எங்களிடம் உலகின் மிக வலிமையான இராணுவம் உள்ளது. எங்களிடம் சிறந்த உபகரணங்கள் உள்ளன. சந்தேகத்திற்கு இடமின்றி, நாங்கள்தான் மிகச் சிறந்த உபகரணங்களைத் தயாரிக்கிறோம். கடந்த இரவு, ஒரு குறிப்பிட்ட இடத்தை நோக்கி 114 ராக்கெட்டுகள் ஏவப்பட்டன. அந்த 114 அதிநவீன ராக்கெட்டுகளில், 100 ராக்கெட்டுகள் ஒவ்வொன்றும் எங்கள் உபகரணங்களைக் கொண்டே சுட்டு வீழ்த்தப்பட்டன. உண்மையில், எங்கள் உபகரணங்கள் எவ்வளவு சிறப்பாக இருக்கின்றன என்பது ஆச்சரியமாக இருக்கிறது. எனவே, நாங்கள் அதை உறுதிப்படுத்த விரும்புகிறோம். நாங்கள் சிறந்த நிலையில் இருப்பதை உறுதி செய்ய, இது ஒரு சிறிய விலைதான்,'' என்றார் அவர். 
SUPER: டோனல்ட் டிரம்ப் / அமெரிக்க அதிபர்

நேற்று, வெள்ளை மாளிகையில் ஜப்பானியப் பிரதமர் சானே தகாயிச்சி உடன் நடைபெற்ற சந்திப்புக்கு பிறகு டிரம்ப் செய்தியாளர்களிடம் பேசினார்.

தீயவர்களைக் கொல்ல நிதி தேவைப்படுவதாக, பென்டகனில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அமெரிக்காவின் தற்காப்பு அமைச்சின் செயலாளர் பீட் ஹெக்ஸெத் முன்னதாக தெரிவித்திருந்தார்.

--பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: மாலை 6 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]