பொது

கர்ப்பிணி மனைவியைத் தாக்கிய ஆடவருக்கு தடுப்புக் காவல்

20/03/2026 03:06 PM

மலாக்கா, 20 மார்ச் (பெர்னாமா) --  கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது கர்ப்பிணி மனைவியைத் தாக்கியதாக சந்தேகிக்கப்படும் ஆடவருக்கு, இன்று ஆயர் குரோ மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நான்கு நாள்கள் தடுப்புக் காவல் விதிக்கப்பட்டது.

விசாரணைக்கு உதவுவதற்காக குற்றவியல் சட்டம், செக்‌ஷன் 323-இன் கீழ் இன்று முதல் அடுத்த வாரம் திங்கட்கிழமை வரையில் தடுப்புக் காவலில் வைக்க மாஜிஸ்திரேட் உத்மான் அப்துல் கானி உத்தரவிட்டார்.

1994-ஆம் ஆண்டு குடும்ப வன்முறைச் சட்டம், செக்‌ஷன் 18 உட்பிரிவு A-வின் கீழ் இவ்வழக்கு விசாரிக்கப்படுவதால் அதிகபட்சம் ஓராண்டு சிறைத் தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.

மலாக்கா, ஜாசின் தாமான் ஶ்ரீ கெமென்டோர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தனது கர்ப்பிணி மனைவியை அடித்ததாகக் கூறப்படும் உணவு விநியோக ஊழியரான அந்நபரை நேற்று போலீசார் கைது செய்தனர்.

சம்பந்தப்பட்ட அந்த 22 வயதான ஆடவர், காலை மணி 11-க்கு போலீஸ் படையினரால் கைது செய்யப்பட்டார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)