ஶ்ரீ அமான் , 20 மார்ச் (பெர்னாமா) -- இன்று காலை மணி 8.30 அளவில், ஸ்ரீ அமான், கம்போங் செலேபோங் ஜிங்காவ் அருகே இரண்டு வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் மூவர் உயிரிழந்ததோடு ஐவர் காயமடைந்தனர்.
இவ்விபத்தில் சிக்கிய புரோட்டோன் X70 மற்றும் புரோடுவா அல்சா ரக வாகனங்கள் இரண்டும் முழுமையாக தீக்கிரையாகின.
புரோட்டோன் X70 வாகனத்தில் பயணித்த 70 வயதான முதியவர் ஒருவரும் 22 வயதான இரு பெண்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததை மருத்துவ குழுவினர் உறுதிப்படுத்தியதாக சரவாக் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை, அறிக்கையொன்றில் தெரிவித்தது.
அதே வாகனத்தில் பயணித்த 4 மற்றும் 6 வயது சிறார்கள், தலைப்பகுதியில் ஏற்பட்ட காயத்தினால், தொடர் சிகிச்சைக்காக ஶ்ரீ அமான் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர்.
இதனிடையே, புரோடுவா அல்சா வாகனத்தில் பயணித்த மூவர் சொற்ப காயங்களுக்கு ஆளாகியுள்ளனர்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: மாலை 6 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)