ஈப்போ, 21 மார்ச் (பெர்னாமா) -- பேராக், ஈப்போவில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க இந்திய முஸ்லிம் பள்ளிவாசலில் இன்று நோன்பு பெருநாள் தொழுகை மிகச் சிறப்பாக நடைபெற்றது.
அவ்வாட்டாரத்தில் வசிக்கும் ஆயிரத்திற்கும் அதிகமான இந்திய முஸ்லிம்கள் அதில் கலந்து கொண்டனர்.
இன்று, ஈப்போ இந்திய முஸ்லிம் பள்ளிவாசலில் வெளிநாட்டினர் உட்பட அப்பகுதியில் உள்ள இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் கலந்து கொண்டதாக, ஈப்போ இந்திய முஸ்லிம் பள்ளிவாசல் இமாம் உஸ்தாத் அல்-ஹாபிஸ் முஹமட் யாசர் அரஃபாத் தெரிவித்தார்.
தொழுகை முடிந்த பின்னர், ஒருவருக்கொருவர் அன்பை பரிமாறிக் கொண்டும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டனர்.
ரமலான் மாதம் முழுவதும் நோன்பிருந்து, அடுத்து வரும் ஷவால் மாதத்தின் முதல் தேதியில் இஸ்லாமியர்கள் நோன்பு பெருநாள் கொண்டாடுவர்.
ரமலான் மாதத்தில், ஏழைகளுக்கு உதவுவது ஊக்குவிக்கப்படும் நிலையில், அது தொடர்ந்து அமலில் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)