உலகம்

தென் கொரியா: தொழிற்சாலையில் பெரும் தீ, பத்து பேர் பலி

21/03/2026 05:08 PM

டேஜன், 21 மார்ச் (பெர்னாமா) --  தென் கொரியா, டேஜனில் உள்ள வாகன உபரிபாகத் தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் பத்து பேர் உயிரிழந்த நிலையில், மேலும் நால்வரைக் காணவில்லை.

மேலும் 59 பேர் பலத்த காயங்களுக்கும் சிராய்ப்பு காயங்களுக்கும் ஆளாகியுள்ளனர்.

காணாமல் போன அந்நால்வரை தேடி மீட்கும் பணியில் தீயணைப்புப் படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

உயிரிழந்த ஒன்பது பேரின் உடல்கள் அத்தொழிற்சாலையின் இரண்டாவது மாடியில் காணபட்ட வேளையில், மேலும் ஒருவரின் உடல் மூன்றாவது மாடியில் கண்டெடுக்கப்பட்டது.

அந்நாட்டு நேரப்படி வெள்ளிக்கிழமை மதியம் மணி 1.17 அளவில் நிகழ்ந்த இத்தீவிபத்தின் போது அத்தொழிற்சாலையில் 170 தொழிலாளர்கள் பணியில் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்டிடம் இடிந்து விழக்கூடும் என்ற அச்சத்தின் காரணமாக தீயணைப்பு வீரர்களால் முன்னதாக அதன் கட்டமைப்பிற்குள் நுழைய இயலவில்லை.

வெடிக்கக்கூடிய 200 கிலோகிராம் சோடியம் அக்கட்டிடத்தினுள் இருந்ததால், தீயை அணைப்பதற்கு அப்படையினர் பெரும் சிரமத்தை எதிர்நோக்கியுள்ளனர்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)