கோத்தா பாரு, 21 மார்ச் (பெர்னாமா) -- கிளந்தான், கோத்தா பாரு, லோரோங் ரெலா கம்போங் புனுட் பயொங்கில், இன்று காலை ஏற்பட்ட தீ விபத்தில் இல்லத்தரசியான ரொஸ்மாவாணி அப்துல்லாவின் வீடு 80 விழுக்காடு தீக்கிரையாகியதை அடுத்து, அவரின் நோன்புப் பெருநாள் கொண்டாட்டம் சோகத்தில் முடிந்தது.
அத்தீ விபத்தில் அருகிலுள்ள இரு வீடுகளும் சேதமடைந்தன.
தீப்பற்றியதை அறிந்த உடனேயே 11 வயதான முஹமட் அம்மார் டர்விசி மற்றும் மாற்றுத்திறனாளியான எட்டு வயதான அஃபியா ஹனான் ஆகிய இரு குழந்தைகளையும் உடனே அவ்வீட்டில் இருந்து வெளியேற்றியதாக ரொஸ்மாவாணி கூறினார்.
சம்பவத்தின்போது, அவரின் கணவர் முஹமட் ஃபட்ஸ்லி அபு ரஷிட்டும் 14 வயதான மூத்த மகனான முஹமட் சஃப்ரான் சரிஃப், நோன்புப் பெருநாள் தொழுகைக்காக புனுட் பயொங் பள்ளிவாசலுக்குச் சென்றிருந்தனர்.
முக்கியமான ஆவணங்கள் எதுவும் எடுக்க முடியாமல் போனதோடு, வரவேற்பு அறையில் இருந்த பயணப் பெட்டிகளை மட்டுமே காப்பாற்ற முடிந்ததாக ரொஸ்மாவாணி தெரிவித்தார்.
காலை மணி 9.44 அளவில் தீ கட்டுப்படுத்தப்பட்டதோடு, தீ விபத்திற்கான காரணமும் சேதத்தின் அளவும் விசாரிக்கப்பட்டு வருகிறது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)