வாஷிங்டன் டி.சி. 22 மார்ச் (பெர்னாமா) -- 48 மணி நேரத்திற்குள் Hormuz நீரிணையை தெஹ்ரான் முழுமையாக மீண்டும் திறக்காவிட்டால், ஈரானின் மின் உற்பத்தி நிலையங்கள் தகர்க்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
போரை முடிவுக்குக் கொண்டு வருவது தொடர்பிலான பேச்சுவார்த்தை நடைபெற்ற ஒரு நாளுக்குள், பதற்றத்தை அதிகரிக்கும் விதமாக அவரின் இந்த மிரட்டல் அமைந்துள்ளது.
எனினும், ஈரானின் எரிபொருள் மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்பு தாக்கப்பட்டால், வட்டாரத்தில் உள்ள அமெரிக்காவின் அனைத்து எரிசக்தி உள்கட்டமைப்புகளும் குறிவைக்கப்படும் என்று ஒருங்கிணைந்த போர் கட்டளை மையம் எச்சரித்ததாக ஈரானிய ஊடகங்கள் முன்னதாக செய்தி வெளியிட்டிருந்தன.
பெரும்பாலான கப்பல்கள், அந்த நீர்வழிப்பாதையைக் கடந்து செல்லவிடாமல் ஈரானியத் தாக்குதல்கள் தடுத்து வருகின்றன.
உலகளாவிய எண்ணெய் மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு விநியோகத்தில், சுமார் ஐந்தில் ஒரு பங்கிற்கு வழித்தடமாகச் செயல்படும் இக்குறுகிய நீர்வழிப்பாதை, உலகளாவிய எரிசக்தி நெருக்கடியை ஏற்படுத்தும் அபாயத்தை விளைவித்துள்ளது.
அந்நீரிணை மூடப்பட்டதால், கடந்த வாரம் ஐரோப்பிய எரிவாயு விலைகள் 35 விழுக்காடு வரை உயர்ந்தன.
--பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]