உலகம்

இஸ்ரேல் மீது ஹூத்தி படைத் தாக்குதல்

28/03/2026 06:24 PM

சனா, 28 மார்ச் (பெர்னாமா) -- இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல் மேற்கொண்டதை ஈரான் ஆதரவு பெற்ற ஏமனின் ஹூத்தி கிளர்ச்சி படை, உறுதிப்படுத்தியிருக்கிறது.

ஈரான் போர் தொடங்கியதிலிருந்து, அப்படை இஸ்ரேல் மீது முதல் முறையாக தாக்குதல் நடத்தியுள்ளது.

சில வாரங்களுக்குள் இரான் மீதான போர் முடிவுக்கு வரலாம் என அமெரிக்கா அறிவித்திருந்த நிலையில், ஹூத்தி கிளர்ச்சி படையின் இத்தாக்குதல் போரை மேலும் நீட்டிக்கலாம் என்று நம்படுகிறது.

ஈரான் மீதான ஆக்கிரமிப்பு முடிவுக்கு வரும் வரை தங்களது நடவடிக்கைகள் தொடரும் என்றும் ஹூதி படை தெரிவித்துள்ளது.

இந்நிலையில் ஹூதி படையின் தாக்குதலை இஸ்ரேலும் உறுதிபடுத்தியிருக்கிறது.

இஸ்ரேலை எதிர்த்து போராடுவதில், காசாவில் உள்ள ஹமாஸ் படைக்கும் ஹூதி ஆதரவு நல்கியது குறிப்பிடத்தக்கது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: மாலை 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)