விளையாட்டு

மயாமி டென்னிஸ் கிண்ணத்தை வென்ற யானிக் சின்னர் 

30/03/2026 05:23 PM

மயாமி, மார்ச் 30 (பெர்னாமா) -- மயாமி பொது டென்னிஸ் போட்டியின் கிண்ணத்தை கைப்பற்றி 2024-ஆம் ஆண்டு பதிவு செய்ய வெற்றியை இத்தாலியின் யானிக் சின்னர் மீண்டும் படைத்துள்ளார்.

இன்று அதிகாலை நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் அவர், செக் குடியரசின் ஜிரி லெஹெக்காவுடன் களம் கண்டார்.

உலகின் இரண்டாம் நிலை ஆட்டக்காரரான யானிக் சின்னர், தமது அனுபவத்தால் சிறந்த ஆட்டத்தை வெளிபடுத்தினார்.

முதல் செட்டை 6-4 என்ற புள்ளிகளில் வென்ற சின்னர், இரண்டாம் செட்டையும் 6-4 என்ற புள்ளிகளில் கைப்பற்றினார்.

இவர்களின் ஆட்டம் ஒரு மணி நேரம் 33 நிமிடங்கள் வரை நீடித்தது.

2017-ஆம் ஆண்டில் ரோஜர் ஃபெடரருக்குப் பிறகு, இந்தியன் வெல்ஸ் மற்றும் மயாமி பட்டங்களை அடுத்தடுத்து வென்ற முதல் வீரராக சின்னர் சாதனை படைத்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)