பொது

செய்தியாளர் ஒருவர் அத்துமீறி நுழைந்த விவகாரம்; வெளிப்படையாக நடத்தப்பட வேண்டும்

31/03/2026 04:27 PM

அலோர் ஸ்டார், 31 மார்ச் (பெர்னாமா) --  கூலிம், Hi-Tech Park பகுதியில் உள்ள தொழிற்சாலை கட்டுமானத் தளத்தில் செய்தியாளர் ஒருவர் அத்துமீறி நுழைந்ததாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பான விசாரணை வெளிப்படையாகவும் தொழில்முறையாகவும் நடத்தப்பட வேண்டும் என்று மலேசிய ஊடக மன்றம், எம்.எம்.எம் வலியுறுத்தியுள்ளது.

அதே நேரத்தில், அச்செயல்முறை செய்தியாளர்கள் தங்களின் பணியைத் தேவையற்ற இடையூறு அல்லது அழுத்தமின்றி மேற்கொள்ளும் உரிமையையும் மதிக்க வேண்டும் என்றும் அது அறிவுறுத்தியது.

செய்தியாளர்களுக்கு எதிரான எந்தவொரு நடவடிக்கையும் அவசியம் மற்றும் சமச்சீர் என்ற கோட்பாடுகளின் அடிப்படையில் கடுமையாக மதிப்பீடு செய்யப்பட வேண்டும்.

உண்மையான சட்ட மீறல்களுக்கும் முறையான ஊடகவியல் துறை நடவடிக்கைகளுக்கும் இடையே தெளிவாக வேறுபடுத்திப் பார்ப்பது முக்கியம் என்றும் எம்.எம்.எம் நேற்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)