புத்ராஜெயா, 31 மார்ச் (பெர்னாமா) -- இன்று அமலுக்கு வந்த சட்டம் 872 அல்லது 2025-ஆம் ஆண்டு கிக் தொழிலாளர்கள் சட்டத்தின் மூலம் நாட்டின் கிக் பொருளாதாரத் துறையில் உள்ள 16 லட்சத்திற்கும் மேற்பட்ட தனிநபர்கள் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சேவை ஒப்பந்தங்களின் வெளிப்படைத்தன்மை, வருமான விகிதங்கள், சமூகப் பாதுகாப்பு மற்றும் தகராறு தீர்வு வழிமுறைகள் உள்ளிட்ட அம்சங்கள் உட்பட தெளிவான சட்டப் பாதுகாப்பைக் கிக் தொழிலாளர்கள் அச்சட்டம் வழங்கும் என்று மனிதவள அமைச்சர் டத்தோ ஶ்ரீ ரமணன் இராமாகிருஷ்ணன் தெரிவித்தார்.
''இந்தச் சட்டம் அமல்படுத்தப்பட்டதன் மூலம் கிக் தொழிலாளர்கள், தங்கள் வேலைவாய்ப்பின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் தொடர்பாக ஒரு தகராறு ஏற்படும் பட்சத்தில் உரிய நீதியைப் பெறுவதற்கு ஒரு தெளிவான செயல்முறை உள்ளது'', என்றார் அவர்.
அதோடு, தள வழங்குநர்கள் தெளிவான சேவை ஒப்பந்தங்களையும் வழங்க வேண்டும் என்று அச்சட்டம் கட்டாயமாக்குவதாக அவர் கூறினார்.
நாளை முதல் கிக் தொழிலாளர்கள் eAduan செயல்முறை மூலம் புகார்களைத் தெரிவிக்கவும் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்றும் அது வலியுறுத்துகிறது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)