பொது

கட்டாரில் மலேசியர்கள் விழிப்புடன் இருக்க மலேசிய தூதரகம் அறிவுறுத்து

டோஹா, 01 மார்ச் (பெர்னாமா) -- மத்திய கிழக்கில் ஏற்பட்டிருக்கும் பதற்றத்தைத் தொடர்ந்து, கட்டாரில் மலேசியர்கள் விழிப்புடன் இருக்கவும், அவசியமானவற்றைத் தவிர வேறு எதற்கும் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என்றும் டோஹாவில் உள்ள மலேசிய தூதரகம், மலேசியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

தற்போது அங்கு நிலைமை நிலையற்றதாக இருப்பதாக அந்தத் தூதரகம் தனது முகநூலில் குறிப்பிட்டுள்ளது.

மலேசியர்கள் அதிகாரப்பூர்வத் தகவல்கள் மூலம் அண்மைய நிலவரங்களைப் பின்பற்றவும், சரிபார்க்கப்படாத தகவல்களைப் பகிர்வதைத் தவிர்க்கவும் தூதரகம் கேட்டுக்கொண்டுள்ளது.

இந்நிலையில், அவசர உதவி தேவைப்படுபவர்கள் +974 3374 6733 என்ற தொலைபேசி எண்ணிலோ mwdoha@kln.gov.my என்ற மின்னஞ்சல் மூலமோ 24 மணி நேரமும் இயங்கும் டோஹாவில் உள்ள மலேசியத் தூதரகத்தைத் தொடர்புக் கொள்ளலாம்.

[ read more ]
13h ago
 MORE NEWS
 பரிந்துரை