பங்கோர், மார்ச் 01 (பெர்னாமா) -- பேராக், பங்கோர் தீவில் உள்ள ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலயத்தின் மாசிமக திருவிழா இன்று விமரிசையாக நடைபெற்றது.
இத்திருவிழாவில், பல மாநிலங்களில் இருந்து வருகை புரிந்த பக்தர்கள் பால் குடங்களை ஏந்தி தங்கள் காணிக்கையை செலுத்தினர்.
சுங்கை பினாங் பெசார் பகுதியில் அமைந்துள்ள இந்த ஆலயம், சுமார் நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகும்.
இத்தீவில் வேலை செய்த மீனவர்கள் மற்றும் தொழிலாளர்களால் நிறுவப்பட்ட இந்த ஆலயம், இன்று சுற்றுப் பயணிகளையும் கவரும் இடமாக விளங்கி வருவதாக ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.குலசேகரன் தெரிவித்தார்.
பங்கோர் தீவு மக்களின் ஒத்துழைப்பினால் இந்த ஆலயத்தை சிறப்பாக வழிநடத்தி திருவிழா கொண்டாட முடிவதாக ஆலயத் தலைவர் ஜெ.மோகனதாஸ் தெரிவித்தார்.
இதனிடையே, இத்திருவிழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் தங்கள் அனுபவங்களை பெர்னாமா செய்திகளிடம் இவ்வாறு பகிர்ந்து கொண்டனர்.
இத்திருவிழாவில், பங்கோர் தீவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த சுற்றுப்பயணிகளும் கலந்து கொண்டனர்.
இதில் அதிகமான சீனர்களும் பால் குடம் ஏந்தி நேர்த்திக் கடன் செலுத்தியது பலரின் கவனத்தை ஈர்த்தது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)