விளையாட்டு

உலகக் கிண்ண காற்பந்து போட்டியிலிருந்து ஈரான் விலகலாம்

01/03/2026 05:37 PM

தெஹ்ரான், 01 மார்ச் (பெர்னாமா) -- 2026 உலகக் கிண்ண காற்பந்து போட்டி தொடங்குவதற்கு இன்னும் சில மாதங்களே எஞ்சியிருக்கும் நிலையில் ஈரான் மற்றும் அமெரிக்கா மோதலின் அண்மைய நிலவரங்களை உலக காற்பந்து சம்மேளனம் ஆய்வு செய்து வருகிறது.

இப்போட்டிக்கு ஈரான்  தகுதி பெற்றிருந்தாலும் போர் காரணமாக அந்நாடு விலக வாய்ப்புள்ளதாகவும் கணிக்கப்பட்டிருக்கிறது.

அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடா இணைந்து நடத்தும் 2026 உலகக் கிண்ண காற்பந்து போட்டியில் இருந்து ஈரான் விலக வாய்ப்புள்ளதாக அந்நாட்டின் காற்பந்து சங்கத்தின் தலைவர் தெரிவித்தார்.

இருப்பினும், இறுதி முடிவு ஈரானிய அரசாங்கத்தால் மட்டுமே எடுக்கப்படும் என்று அவர் கூறினார்.

குழு நிலையில், ஜூன் 15-ஆம் தேதி நியூசிலாந்துடனும், ஜூன் 21-ஆம் தேதி பெல்ஜியத்துடனும், ஜூன் 26-ஆம் தேதி எகிப்துடனும் ஈரான் மோதவுள்ளது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)