பொது

அதிக வருமானத்தை ஈட்டி தரும் வேலைகளை உருவாக்குவதில் அரசாங்க நடவடிக்கை வெற்றி

07/09/2024 06:17 PM

கோலாலம்பூர், 07 செப்டம்பர் (பெர்னாமா) -- நாடு நிலையாக இருப்பதை உறுதி செய்யவும் சாதகமான மற்றும் வணிகம் சார்ந்த சுற்றுச்சூழலை உருவாக்கவும் அரசாங்கம் தொடர்ந்து தீவிரமான முயற்சிகளை மேற்கொள்ளும்.

நிர்வாகத்தை மேம்படுத்தி, ஊழலை எதிர்த்து, உயர் மதிப்புள்ள முதலீடுகளில் கவனம் செலுத்தும் அரசாங்கத்தின் தற்போதைய நடவடிக்கைகள் பெரும்பாலன மக்களுக்கு அதிக வருமானத்தை ஈட்டி தரும் வேலைகளை உருவாக்குவதில் வெற்றி பெற்றுள்ளதாக பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

''கடவுளின் அருளால் நாடு மேலும் நல்ல நிலையில் இருக்கிறது. 2024-ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் நாட்டின் பொருளாதாரம் 5.9 விழுக்காட்டு விகிதத்துடன் வலுவான வளர்ச்சியைக் காட்டியுள்ளது,'' என்றார் அவர். 

பலன் மக்களைச் சென்றடையவில்லை என்றால் வளர்ச்சியைக் காட்டும் புள்ளிவிவரங்கள் அர்த்தமற்றவை என்பதை அரசாங்கம் உணர்வதாக அன்வார் குறிப்பிட்டார்.

இன்று, மாட்சிமைத் தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிமின் அதிகாரப்பூர்வ பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற விருதளிப்பு சடங்கில் கலந்து கொண்டப் பின்னர் பிரதமர் செய்தியாளர்களிடம் பேசினார்.

இன்று நடைபெற்ற அந்த விருதளிப்பு சடங்கில் 116 பேருக்கு உயரிய விருதுகள் வழகப்பட்டன.

-- பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]