பொது

நாட்டின் பொருளாதார நிலை & வர்த்தக செயல்திறன் வளர்ச்சி - மாமன்னர் மகிழ்ச்சி

07/09/2024 06:22 PM

கோலாலம்பூர், 07 செப்டம்பர் (பெர்னாமா) -- நாட்டின் பொருளாதார நிலை மற்றும் அதன் வர்த்தக செயல்திறன் மேம்பட்டிருப்பது குறித்து மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் மகிழ்ச்சி தெரிவித்திருக்கிறார்.

மேலும் வேலை வாய்ப்புகளை உருவாக்கவும் மக்களின் வருமானம் மற்றும் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும் தேசிய பொருளாதாரத்தை ஊக்குவிக்க அரசாங்கம் தொடர்ந்து பணியாற்றும் என்று மாமன்னர் நம்பிக்கை தெரிவித்தார்.

''அனைத்துத் தலைவர்களும் அரசாங்க நிர்வாக உறுப்பினர்களும் மக்கள் மற்றும் நாட்டின் நலனுக்கான முழுப் பொறுப்புடன் பணியாற்ற வேண்டும். ஊழல் மற்றும் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். ருகுன் நெகாரா கோட்பாடுகளுக்கு ஏற்ப அனைத்து மலேசியர்களும் தொடர்ந்து ஒற்றுமையைப் பேணுவார்கள் என்றும் நல்லிணக்கத்துடனும் ஒற்றுமையுடனும் வாழ்வார்கள் என்று நான் நம்புகிறேன்,'' என்றார் அவர். 

சனிக்கிழமை, இஸ்தானா நெகாவில் நடைபெற்ற தமது அதிகாரப்பூர்வ பிறந்தநாளை ஒட்டி நடைபெற்ற விருதளிப்பு சடங்கில் உரையாற்றும் போது சுல்தான் இப்ராஹிம் அவ்வாறு கூறினார்.

இச்சடங்கில் பேரரசியார் ராஜா சாரித் சோஃபியாவும் கலந்து கொண்டார்.

-- பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]