பொது

நீதிமன்றங்களால் தண்டிக்கப்படுபவர்களின் உயர் விருதுகள் மீண்டும் பெறப்படும்

07/09/2024 06:27 PM

கோலாலம்பூர், 07 செப்டம்பர் (பெர்னாமா) -- குற்றம் செய்பவர்கள், நாட்டை இழிவுபடுத்துபவர்கள் மற்றும் நீதிமன்றங்களால் தண்டிக்கப்படுபவர்கள் ஆகியோருக்கு வழங்கப்பட்ட அரண்மைனையின் உயர் விருதுகள் மீண்டும் திரும்பப் பெறப்படும் என்று மாமன்னர் எச்சரித்திருக்கிறார்.

உயர் விருது பெற்ற ஒவ்வொரு பெறுநரும் அரசாங்கத்திற்கு நேர்மையாகவும் நம்பகத்தன்மையுடனும் இருக்க வேண்டும் என்று கூறிய சுல்தான் இப்ராஹிம் ஊழல் மற்றும் எந்தவொரு குற்றவியல் நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என்று அறிவுறுத்தினார்.

நாட்டின் பெயரைக் கெடுக்கும் அல்லது குற்றம் செய்து நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட விருது பெற்றவர் இருந்தால் அவரின் அனைத்து பட்டங்களும், கௌரவப் பதக்கங்களும் திரும்பப் பெறப்படும்.

ஒவ்வோர் ஆண்டும் மாமன்னரின் அதிகாரப்பூர்வ பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது விருதுகள் பெற பெற முயற்சி செய்வதாகவும் அதற்கு முகவர்கள் செயல்படுவதாகவும் கூறினார்.

டான் ஶ்ரீ அல்லது டத்தோ பட்டம் பெறுவதற்கு சிலர் தம்மிடமே நேரடியாக கேட்டதையும் மாமன்னர் சுட்டிக்காட்டினார்.

ஆகவே, இவ்வாண்டு 116 பேருக்கு மட்டுமே உயர் விருதுகள் வழங்க தாம் முடிவு செய்ததாக அவர் தெரிவித்தார்.

-- பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]