உலகம்

நியூயார்க் மீது தாக்குதலா; சந்தேகத்தின் பேரில் பாகிஸ்தான் இளைஞர் கைது

07/09/2024 07:30 PM

கியூபெக், 07 செப்டம்பர் (பெர்னாமா) -- அமெரிக்க தலைநகர் நியூயார்க் மீது தாக்குதல் மேற்கொள்ள திட்டமிட்டிருந்ததாக சந்தேகிக்கப்படும் பாகிஸ்தான் இளைஞன் ஒருவர் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார்.

கனடா, கியூபெக்கில் வசித்து வரும் அந்த 20 வயது இளைஞன் அக்டோபர் 7-ஆம் தேதி, நியூயார்க், புருக்கிலின் எனும் இடத்தில் அத்தாக்குதலை மேற்கொள்ள திட்டமிட்டிருந்தாக நம்பப்படுகிறது.

கடந்த ஆண்டு அக்டோபர் 7-ஆம் தேதி, இஸ்ரேலில் ஹமாஸ் படையினர் தாக்குதல் மேற்கொண்டு ஓர் ஆண்டு நிறைவடையவிருக்கும் நிலையில் ஷாசெப் ஜடூன் எனும் அந்த இளைஞன், ஐ.எஸ் அமைப்பின் உதவியுடன் அத்தாக்குதலை மேற்கொள்ள திட்டம் தீட்டியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த தாக்குதல் வழி, நியூயார்க்கில் வசிக்கும் யூதர்களை கொல்வதற்கு ஷாசெப் ஜடூன் திட்டம் தீட்டியிருந்தான்.

தம்மை தற்காத்துக் கொள்ள அந்த இளைஞனுக்கு சட்ட உதவி வழங்கப்பட்டாத குறித்து இதுவரை அறிவிக்கப்படவில்லை.

கனடாவில் இருந்து அமெரிக்காவிற்கு பயணித்து, அங்கு தானியங்கி ஆயுதங்களை பயன்படுத்தி தாக்குதலை மேற்கொள்ள திட்டமிட்டிந்ததாக விசாரணை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

-- பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]