பொது

ஐக்கிய அரபு சிற்றரசு சந்தையில் மலேசிய தொழில்முனைவோரின் தயாரிப்புகள்

08/09/2024 06:56 PM

துபாய், 08 செப்டம்பர் (பெர்னாமா) --  சனிக்கிழமை ஐக்கிய அரபு சிற்றரசு, துபாயில் உள்நாட்டு வாணிப மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சால் ஏற்பாடு செய்யப்பட்ட Citarasa Malaysia எனும் திட்டம், மலேசியாவின் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோரின் அதிகமான தயாரிப்புகள் ஐக்கிய அரபு சிற்றரசு சந்தையில் ஊடுருவ வழி வகுக்கும். 

சீனா, ஜப்பான் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளைத் தவிர மத்திய கிழக்கில் ஐக்கிய அரபு சிற்றரசு சிறந்த நிலையைக் கொண்டிருப்பதால், Citarasa Malaysia திட்டத்தை ஏற்பாடு செய்ய அந்நாடு சிறந்த தளமாகும் என்று அதன் அமைச்சர் டத்தோ அர்மிசான் முஹமட் அலி தெரிவித்தார்.

மலேசியாவின் 16 நிறுவனங்களின் பொருட்கள் லூலூ பேரங்காடியில் விற்கப்படவுள்ளதாக துபாயில் உள்ள லூலூ பேரங்காடியில் Citarasa Malaysia திட்டத்தைத் தொடக்கி வைத்த பின்னர், டத்தோ அர்மிசான் பெர்னாமாவிடம் தெரிவித்தார்.

துபாயில் மட்டுமே 48 கிளைகளைக் கொண்டிருக்கும் லூலூ பேரங்காடி, ஐக்கிய அரபு சிற்றரசில் 120 கிளைகளைக் கொண்டுள்ளதை அர்மிசான் சுட்டிக்காட்டினார்.

கடந்த ஆண்டு மலேசியாவின் 241 பொருட்கள், ஐக்கிய அரபு சிற்றரசு சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டதாகவும் அதன் மதிப்பு 3 கோடி ரிங்கிட் என்றும் அவர் கூறினார்.

மலேசியாவின் 30 நிறுவனங்களிடம் இருந்து அந்த பொருட்கள் பெறப்பட்டதாக அர்மிசான் தெரிவித்தார்.

இதனிடையே, சீனாவில் உள்ள ஒரு கூட்டுறவு கழகம் மூலம் ஒத்துழைப்பை மேற்கொள்ளவும் உள்நாட்டு வாணிப மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சு ஆய்வு செய்து வருவதாக அர்மிசான் குறிப்பிட்டார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)