பொது

பிரதமரின் பதவிக் காலத்தைக் கட்டுப்படுத்தும் முயற்சி; மாமன்னரின் சிறப்பு அதிகாரங்களைப் பாதிக்காது

02/03/2026 05:03 PM

கோலாலம்பூர், மார்ச் 02 (பெர்னாமா) -- பிரதமரின் பதவிக் காலத்தை 10 ஆண்டுகளாகக் கட்டுப்படுத்தும் அரசியலமைப்புத் திருத்தம், மாட்சிமை தங்கிய மாமன்னரின் சிறப்பு அதிகாரங்களைப் பாதிக்காது.

பரிந்துரைக்கப்பட்ட திருத்தம் நாடாளுமன்றத்தின் அடிப்படை ஜனநாயகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த வில்லை என்றும், அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையை தீர்மானிப்பதில் மக்களவையின் பங்களிப்பைக் குறைக்காது என்றும் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் விளக்கம் அளித்துள்ளார்.

''கூட்டரசு அரசியலமைப்பின் கட்டமைப்பிற்குள், பிரதமரின் நியமனம் பெரும்பான்மையான மக்களவை உறுப்பினர்களின் நம்பிக்கையைப் பொறுத்தது. நாட்டின் நிர்வகிப்பில் இந்தப் பதவி மிக முக்கியப் பங்கு வகித்தாலும், அரசியலமைப்பு அப்பதவிக்கான கால வரம்பைக் குறிப்பிடவில்லை,'' என்றார் அவர்.

2026-ஆம் ஆண்டு திருத்தம் செய்யப்பட்ட அரசியலமைப்பு சட்ட மசோதாவை இரண்டாம் வாசிப்பிற்காக, திங்கட்கிழமை மக்களவையில் தாக்கல் செய்தபோது பிரதமர் அவ்வாறு தெரிவித்தார்.

எனவே, தனிப்பட்ட முறையில் அல்லாமல், கழக ரீதியாக கூடுதல் சரிபார்ப்பு மற்றும் சமநிலை வழிமுறையுடன், நடப்பிலுள்ள அரசியலமைப்பு கட்டமைப்பை பூர்த்தி செய்வதற்காக இந்தத் திருத்தம் பரிந்துரைக்கப்பட்டதாக டத்தோ ஶ்ரீ அன்வார் கூறினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)