பொது

சீனாவுக்கான அலுவல் பயணத்தில் சுற்றுலா விசா விலக்கு நீட்டிப்புக்கு முக்கியத்துவம்

08/09/2024 07:09 PM

கோலாலம்பூர், 08 செப்டம்பர் (பெர்னாமா) --  அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டு துணைப் பிரதமர் டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மாட் சாஹிட் ஹமிடி, இன்று சீனா சென்றுள்ளார்.

இந்த அலுவல் பயணத்தில் சீனாவிற்கு செல்லும் மலேசியர்களுக்கான சுற்றுலா விசா விலக்கு 15-இல் இருந்து 30 நாட்களுக்கு நீட்டிக்க வேண்டும் என்பது உட்பட மேலும் பல முக்கிய விவகாரங்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்படும் என்று உள்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்தார்.

சீனாவுக்கு செல்லும் மலேசியர்களுக்கு வழங்கப்படும் விசா விலக்கு சலுகை 2025-ஆம் ஆண்டு நிறைவடையவிருப்பதால், அதனை 2026-ஆம் ஆண்டு வரை நீட்டிக்கவும் பரிந்துரைக்கப்படும் என்று டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் கூறினார்.

நாளை ஷங்காயில் நடைபெறவிருக்கும் லியான்யுங்காங் உலக பொது பாதுகாப்பு ஒத்துழைப்பு கலந்துரையாடலில் அவ்விரு பரிந்துரைகளை டாக்டர் அஹ்மாட் முன்வைப்பார் என்று சைஃபுடின் குறிப்பிட்டார்.

இன்று தொடங்கி செப்டம்பர் 12-ஆம் தேதி வரை, அஹ்மாட் சாஹிட் சீனாவுக்கு அலுவல் பயணம் மேற்கொண்டுள்ளார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)