பொது

அரசாங்க - தனியார் துறைகளுக்கான முதன்மை ஒத்துழைப்புத் திட்டத்தை செயல்படுத்த கண்டிப்பான நிர்வாகமுறை

09/09/2024 05:36 PM

சைபர்ஜெயா, 09 செப்டம்பர் (பெர்னாமா) --   2030ஆம் ஆண்டுக்கான பொது-தனியார் ஒத்துழைப்புத் திட்டத்தின் கீழ், அதன் அமலாக்கத்தைச் செயல்படுத்துவதில் கண்டிப்பான நிர்வாக முறை கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தினார்.

மேலும், இத்திட்டத்தின் வெற்றியை உறுதி செய்வதில் முதன்மை அம்சமாக இருக்கும் நல்லாட்சியின் கொள்கைகளுக்கு இணங்காத தரப்பினர் மீது மடானி அரசாங்கம் ஒருபோதும் சமரசம் கொள்ளாது என்றும் அவர் திட்டவட்டமாகக் கூறினார்.

அரசாங்க மற்றும் தனியார் துறைகளுக்கு இடையிலான கூட்டு முயற்சிகளைச் செயல்படுத்துவதில் வெளிப்படைத்தன்மை, நம்பகத்தன்மை, ஒருமைப்பாடு ஆகியவற்றை உறுதிப்படுத்த, ஒவ்வொரு திட்டத்திலும் வலுவான நிர்வாகக் கோட்பாடுகள் பயன்படுத்தப்பட வேண்டும் என்று டத்தோஸ்ரீ அன்வார் கூறினார்.

இதனிடையே, சம்பந்தப்பட்ட நிறுவனங்களில் உள்ள ஊழியர்களின் நலனைக் கருத்தில் கொண்டே இத்திட்டம் வலியுறுத்தப்பட்டுள்ளதையும் அன்வார் சுட்டிக்காட்டினார்.

எனவே, வீடு, கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட குடும்பத் தேவைகளின் அடிப்படையில் தொழிலாளர்களின் ஊதியம் பரிசீலிக்கப்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)